top of page

தொடக்கநிலை 2 - 2025 

தாய்மொழி வார நடவடிக்கைகைச்சங்கிலி உருவாக்குதல்இந்த வருடம் தொடக்கநிலை இரண்டாம் வகுப்பு மாணவர்கள் தாய்மொழி வார நடவடிக்கையில் தமிழ் கலாச்சாரத்தின் தொடர்பாக நகைகள், அணிகலன்கள், அலங்காரங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொண்டார்கள்.பொதுவாக, இந்தியக் கலாச்சாரத்தில் இவை விழாக்காலங்களிலும் கொண்டாட்டங்களிலும் அணியப்படுகின்றன என்பதைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள்.மாணவர்கள், ‘நகைகள்’ என்னும் பெரிய புத்தகம் ஒன்றின் சிறுகதை வாயிலாக விவரமாக தெரிந்து கொண்டதோடு அவர்கள் முத்துகளையும் சில அலங்காரப் பொருட்களையும் கொண்டு தங்களுக்கென கைச்சங்கிலிகளையும் செய்ய கற்றுக்கொண்டார்கள்.இந்நடவடிக்கையில், மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய கைச்சங்கிலிகளோடு இருக்கும் புகைப்படங்களை நீங்களும் இங்குக் கண்டு மகிழலாம்!

  • Instagram
  • YouTube
  • Facebook
  • Pinterest
bottom of page