top of page
ஒன்றாம் வகுப்பு - விலங்கியல் பூங்கா கற்றல் பயணம்

 

செங்ஹுவா தொடக்கப்பள்ளியின் முதலாம் நிலை மாணவர்கள் கடந்த 23 ஜூலை 2025 அன்று மண்டாய் விலங்கியல் பூங்காவிற்குக் கல்வி பயணம் மேற்கொண்டனர். இந்தப் பயணம் தாய்மொழிப் பிரிவும் ஆங்கில மொழி பிரிவும் இணைந்து மேற்கொண்ட பயன்மிக்க அனுபவமாகும். விலங்குகளை நன்கு அறிந்துகொள்வதோடு, அழிந்து வரும் விலங்குகளைப் பாதுகாப்பதற்கான முறைகளையும் தெரிந்துகொள்வதே இந்தக் கல்விப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. இப்பயணத்தில் பங்கேற்ற 21 தமிழ் மொழி மாணவர்களும் பல்வேறு விலங்குகளைப் பார்த்து, அவற்றின் வசிப்பிடம், உணவு முறைகள், தனித்துவமான அம்சங்கள் போன்றவற்றை விரிவாக அறிந்துகொண்டனர். குறிப்பாக, கடற்சிங்கத்தின் பிரத்தியேகக் காட்சியை அவர்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர். அதன் வாழ்க்கை முறையையும் மனிதர்கள் கடலில் வீசும் குப்பைகளினால் அவற்றிக்கு ஏற்படும் ஆபத்துகள் பற்றியும் தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.

 

“கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக”

 

என்ற திருக்குறளுக்கு ஏற்ப, மாணவர்கள் விலங்கியல் பூங்காவில் கற்றுக்கொண்ட அறிவுப் பாடங்களைத் தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவோம் என மாணவர்கள் உறுதியளித்தனர். இந்தக் கல்விப் பயணம் மாணவர்களுக்கு மறக்க முடியாத பயனுள்ள வாழ்நாள் அனுபவமாக அமைந்தது.

Our Story

Every website has a story, and your visitors want to hear yours. This space is a great opportunity to give a full background on who you are, what your team does, and what your site has to offer. Double click on the text box to start editing your content and make sure to add all the relevant details you want site visitors to know.

If you’re a business, talk about how you started and share your professional journey. Explain your core values, your commitment to customers, and how you stand out from the crowd. Add a photo, gallery, or video for even more engagement.

Meet The Team

Our Clients

  • Instagram
  • YouTube
  • Facebook
  • Pinterest
bottom of page