top of page

தீபாவளி 2024

தீபாவளி, இந்து மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். எங்கள் பள்ளி தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடியது.

எங்கள் தீபாவளி பள்ளி கொண்டாட்டத்தின்போது பல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தோம்.  மல்லிகை மற்றும் சாமந்தி பூக்களை எப்படி அழகாக மாலைகளாகக் கட்டுவது, தோரணம் கட்டுதல் ரங்கோலி வரைதல், பூந்தி செய்தல், மருதாணி போடுதல், போன்றவற்றைக் கற்றுக்கொண்டு மகிழ்ந்தனர் நம் மாணவர்கள். பாரம்பரிய நடனங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர். பேய் ஹுவா (Pei Hwa Presbyterian Primary School) பள்ளி மாணவர்களும் எங்கள் தீபாவளி பள்ளி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். அதோடு 20 முதியோர்களும் முதியோர் இல்லத்திலிருந்து வந்து (Adventist Nursing & Rehabilitation Centre) எங்களோடு கலந்துகொண்டனர்.

bottom of page