top of page

தமிழ்மொழி போட்டிகள் 2023

மாணவர்களின் தமிழ் மொழித் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம்!

தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பும் வெற்றியும்!

செங்ஹுவா தொடக்கப் பள்ளித் தமிழ் மாணவர்கள் தேசிய அளவிலான பல்வேறு தமிழ் போட்டிகளில் பங்கு பெற்றனர். அவர்கள்  தங்கள் திறமைகளை வெளிப்படுத்திச்  சான்றிதழ்களையும் வெற்றிக் கோப்பைகளையும் பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.

நம் பள்ளி இந்த மாணவர்களின் திறமைகளுக்குக் கிடைத்த  பரிசுகளையும் சான்றிதழ்களையும் அனைவர் முன்னிலையிலும்  அங்கீகரித்துப் பாராட்டியது. 

இதனால் இம்மாணவர்கள் பள்ளி மண்டபத்தில் கூடியிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியரிடமிருந்து மகிழ்வுடனும் பெருமையுடனும் அனைவரின் பாராட்டோடு மீண்டும்  அப்பரிசுகளைப் பெற்றுக்கொண்டனர்.

  • Instagram
  • YouTube
  • Facebook
  • Pinterest
bottom of page