top of page

கோலம்  நடவடிக்கை 2023

தொடக்கநிலை பாலர் நிலை மாணவர்கள் கூடிக் கற்ற  கோலம் வரைதல் நடவடிக்கை

தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்களும் ஆறாம் வகுப்பு மாணவர்களும் பாலர் பள்ளி மாணவர்களும் இணைந்து வண்ண அரிசியில் கோலம் வரைந்தார்கள்.  

முதல்நாள், அரிசி, வண்ணத் திரவம் மற்றும் தேவையான பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. 

பாலர் பள்ளி ஆசிரியர் மாணவர்களிடம் எப்படி செய்ய வேண்டும் என்று ஒரு முன்  மாதிரியைச் செய்துக் காண்பித்தார். 

மாணவர்கள் அதைக் கற்றபின், அவர்கள் இணைந்து வண்ண அரிசியை முதலில் தயாரித்தார்கள். பின்னர், அவற்றை உலர வைத்தார்கள். 

இரண்டாம் நாள் மாணவர்கள் உலர்ந்த வண்ண அரிசியைக் கொண்டு கோலங்களை உருவாக்கினார்கள். இந்நடவடிக்கை மாணவர்களுக்கு கூடிக்கற்றல் மற்றும்  மகிழ்வூட்டும் பாடமாக  அமைந்தது. 

மாணவர்களின் புகைப்படங்கள் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. நீங்களும் அவர்களின் புகைப்படங்களைக் கண்டு ரசியுங்கள்!

                                       

  • Instagram
  • YouTube
  • Facebook
  • Pinterest
bottom of page