top of page
P4 MTL Fortnight 2024
2024-ஆம் ஆண்டு தொடக்கநிலை நான்காம் வகுப்பு மாணவர்கள், தாய்மொழி இருவார நடவடிக்கைகளை முன்னிட்டு, அகல்விளக்கு வண்ணமிடுதல் எனும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். தீபாவளி கொண்டாட்டங்களுக்கு முன்னர், அகல்விளக்குப் பற்றிய பல தகவல்களை மாணவர்கள் கேட்டபின் அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். அகல்விளக்கு எதனால் செய்யப்படுகிறது, அதனைச் செய்ய எவ்வளவு நாட்கள் ஆகும், எவ்வாறு அதற்கு அழகாக வண்ணம் தீட்டுவது போன்ற பல தகவல்களை மாணவர்கள் பயிற்றுவிப்பாளர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். கலைநயத்துடன் வண்ணமிட்ட விளக்குகளை வீட்டிற்கும் எடுத்துச் சென்றார்கள்.
bottom of page