top of page

தொடக்கநிலை 1 - 2025

MTL Fortnight Activity - தாய்மொழி இரு வார நடவடிக்கை

 

 

மாணவர்கள் தமிழ்ப் புத்தகங்களை விருப்பத்துடன் வாசிக்கும் பழக்கத்தை வளர்க்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் கதைப்புத்தகங்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல, அவை சமூக, கலாசார, பொதுக் கலைஞானம் மற்றும் வாழ்க்கைத் திறன்களை வளர்க்கக் கூடும் என்பதை மாணவர்கள் உணரவே இந்த நடவடிக்கை நடத்தப்பட்டது-முக்கிய நோக்கங்கள்• மாணவர்களில் தமிழ்ப் புத்தகங்களை வாசிக்கும் விருப்பத்தையும் ஆர்வத்தையும் வளர்த்தல்.• தமிழ் கதைப்புத்தகங்கள் பொழுதுபோக்கு மட்டுமின்றி, சமூக, கலாசார மற்றும் பொது அறிவு, வாழ்க்கைத் திறன்களை வளர்க்கக்கூடியவை என்பதை வாசித்துக் காட்டுதல்.• வாசித்துக்காட்டல் முடிந்த பின், வாசிப்புடன் தொடர்புடைய ஒரு கலாசார சார்ந்த நடவடிக்கையில் மாணவர்களை ஈடுபடுத்துதல். மாணவர்களிடம் மயில் இறகு என்ற கதையை வாசித்துக்காட்டிய பிறகுஆசிரியை அக்கதையை ஒட்டி முக்கிய கருத்துகள் குறித்து உரையாடல் நடத்தினார். மாணவர்கள் மகிழ்ச்சியாக தங்கள் கருத்துகளைக் கூறினர்.. பிறகு இந்திய மயில் நடனத்தைப் பார்த்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். மாணவர்கள் மயில் இறகுகளைப் பயன்படுத்தி ஒரு புத்தகக்குறி (Bookmark) உருவாக்கினர்.

Faded Shapes
  • Instagram
  • YouTube
  • Facebook
  • Pinterest
bottom of page