தீபாவளி - 2021
புத்தாடை, இனிப்பு, மத்தாப்பு: மன இருளைப் போக்கும் தீபாவளி!
தீபாவளி (Deepavali,) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுந்து, இல்லத்தின் மூத்த உறுப்பினரிடம் ஆசிர்வாதம் வாங்குவார்கள். அந்த மூத்தவர் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தலையில் நல்லெண்ணெய் தொட்டு வைப்பார். பின் உடல் முழுவதும் எண்ணெய் பூசிக் கொண்டு, வெந்நீரில் குளிப்பார்கள். பின்னர் புத்தாடை உடுத்தி, பட்டாசுகளை வெடித்து மகிழ்வர். பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். வீட்டில் இனிப்புக்கள் நிறைய செய்து உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார்களுக்கு கொடுத்து மகிழ்வர்.